ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை வரை நீட்டிப்பு

அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரை மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது. அமலாக்கத்துறை வழக்கிலும் கைது செய்யப்படலாம் என்பதால், அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ப. சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்திற்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கினர். அதாவது, இன்று வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் மற்றும் சிபிஐ தரப்பில் காரசாரமான வாதம் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நாளை வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts