ப.சிதம்பரம் ஓடி ஒளியக்கூடாது : அமைச்சர் ஜெயக்குமார்

ப.சிதம்பரம் ஓடி ஒளியக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார். முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், அவர் ஓடி ஒளியக்கூடாது என்று அமைச்சர் கூறினார். நீலகிரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க தேவை இருந்தால், அது குறித்து முதலமைச்சர்தான் முடிவு செய்வார் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக சென்னையில் கலைவாணர் அரங்கில் குரூப் – 4 தேர்வர்களுக்கான ஒருநாள் ஊக்க முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

Related Posts