ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்த ஒரு தொடர்பு இல்லை

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு எந்த ஒரு தொடர்பு இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை  சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர்.  இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. சிபிஐயை பா.ஜனதா தவறாக பயன்படுத்துகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே, ப.சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. அமைப்பை தவறாக பயன்படுத்துவதாக மத்திய அரசு மீதும், பா.ஜனதா மீதும் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் சுமத்தினர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் காங்கிரசின் குற்றச்சாட்டு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று தெரிவித்தார். ப.சிதம்பரம் கைது நடவடிக்கையில் பாரதிய ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

ஒரு வழக்கில் தகவல்களை சேகரிக்க சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு எல்லா அதிகாரமும் இருப்பதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி சரியான வழியை காட்டவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related Posts