ப. சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ காவலை வைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்ட சிபிஐ காவலை எதிர்த்து தொடரப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ காவலை எதிர்த்து சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், நீதிமன்ற நடைமுறையில் சிதம்பரத்துக்கு சாதகமாக உத்தரவிட்டால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்று சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. இதனிடையே, ப.சிதம்பரத்தின் இடைக்கால ஜாமீன் மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதுவரை ப.சிதம்பரத்தின் சி.பி.ஐ. காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Posts