ப.சிதம்பரம் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை : அமெரிக்கை நாராயணன் குற்றஞ்சாட்டு

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சட்டம் அனைவருக்கும் பொது என்று கூறிய அவர், இது பழிவாங்கும் நடவடிக்கை என மக்கள் புரிந்துகொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியா சர்வாதிகார நாடாக மாறிவருகிறது என்ற கருத்தையும் அவர் முன்வைத்துள்ளார்.

ப. சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் முகாந்திரம் இருப்பதாக கூறியுள்ள நீதிமன்றம், வழக்கில் அவர் முக்கியமானவர் என்று தெரிவித்திருப்பதாக பாரதிய ஜனதா மாநில செயலாளர் கே.டி. ராகவன் கூறியுள்ளார். வழக்கை எதிர்கொள்ளாமல் அவர் ஓடி ஒளிவது
சரியல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், ப. சிதம்பரம் தலைமறைவாக இருப்பதன் மூலம், மடியில் கனம் இருப்பதாக மக்கள் நினைப்பதாக தெரிவித்துள்ளார். இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை எனவும் ராகவன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Related Posts