ப.ஜ.க தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றுத் தகவல்

வரும் மக்களவைத் தேர்தல் உண்மைக்கும், ஊழலுக்கும் இடையே நடைபெறும் போட்டி. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் முழுவதும் பொய்கள் நிரப்பியவை. அக்கட்சி வெளியிட்டது தேர்தல் அறிக்கை அல்ல; பொய்களால் நிரம்பிய ஆவணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிபடி, 18,000 கிராமங்களிலும் 1,000 தினங்களில் மின்சார வசதி செய்துத் தரப்பட்டதாகவும்,  தேசியக் கொடியை அவமதிப்பவர்கள், நாட்டுக்கு எதிராக கோஷங்களை எழுப்புபவர்கள், சட்டமேதை அம்பேத்கரின் சிலைகளை சூறையாடுபவர்கள் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்நிலையில், 2019 மக்களவைத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை திங்கள்கிழமை  வெளியிடப்படுகிறது. 

டெல்லி பாஜக தலைமையகத்தில் தேர்தல் அறிக்கையை தேசிய தலைவர் அமித்ஷா வெளியிடுவார் எனவும்,  தகவல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தத் தோ்தல் பரிந்துரை அறிக்கையைத் தயாரிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 8 ஆம் தேதி தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது பாஜக.

Related Posts