மகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு

ராஜிவ் கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக வேலூர் சிறையில் நளினி அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பரோல் கேட்டு கொடுக்கப்பட்ட மனுவை வேலூர் சிறை நிர்வாகம் பரிசீலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டுக்கு பிறகு 3700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

லண்டனில் வசிக்கும் தனது மகள் ஹரிதாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்றும், நேரில் வாதாட அனுமதிக்க வேண்டும் என்றும் நளினி கோரிக்கை வைத்துள்ளார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

Related Posts