மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபா கோபுரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

            இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவரான மகாத்மா காந்தி. வன்முறையை தவிர்த்து சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு பாடுபட்டார். இதனால், மகாத்மா என்று அவர் அழைக்கப்பட்டார். இவரது பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்ததினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, துபாயில் உள்ள உலகின் உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா நேற்று வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. கலிஃபா கோபுரத்தில் இந்திய மூவர்ண கொடி மற்றும் காந்தியின் புகைப்படம் மற்றும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

Related Posts