மகாராஷ்டிராவில் பழங்குடியின பெண்கள் பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் முதன்முறையாக பேருந்து ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பைலட் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 163 பழங்குடியின பெண்களுக்கு முதலில் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் அரசு போக்குவரத்தில் ஓட்டுநர்களாக பணியமர்த்தப்படுவார்கள்.

இந்த புது முயற்சியை புனேவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டேல் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், நீண்ட தொலை தூரம்  பெண் ஓட்டுநர்களை அனுப்பக்கூடாது என்றும் வெளியில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் பெண் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு பிரதீபா பட்டேல் வலியுறுத்தினார்.

Related Posts