கட்சிரோலி என்கவுண்டர் – மாவோயிஸ்டுகள் பலி எண்ணிக்கை 39-க உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் நடந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா : ஏப்ரல்-26

மகாராஷ்டிர மாநிலம், ஜிமல்கட்டா என்ற இடத்தில் உள்ள ராஜாராம் கண்ட்லா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கும் அதிரடிப்படை காவல்துறையினருக்கும் இடையே கடந்த இரு நாட்களாக துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இதில். ஏராளமான மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். முதல் கட்டமாக நடந்த தேடுதல் வேட்டையில் 22 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் இந்திராவதி ஆற்றில் 11 பேரின் உடல்களும், வனப்பகுதியில் மேலும் 4 பேரின் உடல்களும் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில், இந்திராவதி ஆற்றில் இன்று நடந்த தேடுதல் வேட்டையில், மேலும் 2 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து, பலியான மாவோயிஸ்ட்கள் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts