மகாராஷ்டிரா பிரச்சாரத்தில்  பிரதமர் மோடி பேசியது, தேர்தல் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் 

மகாராஷ்டிரா மாநிலத்தில் வர்தா பகுதியில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது,, ‘காங்கிரஸ் கட்சி தலைவர் இந்துக்கள் அதிகம் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட பயந்து, இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்கும் தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.  பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு  மத வெறுப்புணர்வையும், பிரிவினையையும் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாக  காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். ஆனால் 3 வாரங்களாகியும் எவ்வித பதிலும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை. இதையடுத்துஉச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் சார்பில்  வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது பிரதமர் மோடி மீதான தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை  மே 2 ம் தேதிக்கு  ஒத்தி வைத்தனர்.  இந்த நோட்டீசுக்கு பதிலளித்துள்ளதேர்தல் ஆணையம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வத்ரா பகுதியில் உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதை சுட்டிக்காட்டி பேசியது தேர்தல் விதிககளை மீறியது அல்ல என கூறியுள்ளது.

Related Posts