மகாராஷ்டிரா மாநிலம் ஷிர்பூர் நகர் அருகே ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து : 20 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம் ஷிர்பூர் நகர் அருகே ரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். தொழிற் சாலைக்குள் 70க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

ஷிர்பூரை அடுத்த வகாடி என்ற கிராமத்தில் மகாராஷ்டிர தொழில் வளர்ச்சிக் கழக வளாகத்தில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று காலை பயங்கர வெடிச்சத்தம் கேட்டது.  அந்த நேரத்தில் தொழிற்சாலைக்குள் சுமார் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. வெடி விபத்தைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதுமே கரும் புகைமண்டலம் பரவியுள்ளது. வெடிச்சத்தத்தால் சுற்று வட்டார கிராமங்களில் கடும் அதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து போலீசாரும் தீயணைப்பு படை வாகனங்களும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். இந்த வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் தொழிற்சாலைக்குள் சிக்கியிருக்கக் கூடும் என்றும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் தொழிற்சாலையில் இருந்த சக்தி வாய்ந்த சிலிண்டர்கள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது

Related Posts