மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் மக்கள் புனிதநீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்நிலையில் 20 ஆண்டுக்களுக்குப் பிறகு புரட்டாசி மாத சனிக்கிழமையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அமவாசை வருவதால் அது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள்  புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.  இதனையொட்டி பக்தர்களில் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தனர். மேலும்  அவர்கள் கடற்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். பக்தர்கள் வருகையையொட்டி நகராட்சி சார்பில் குடிதண்ணீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன. மேலும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் ஏரி காத்த கோதண்டராமர் திருக்கோவிலில் உள்ள குளத்தில் பொதுமக்கள் இன்று அதிகாலை முதல்  தங்களது முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

Related Posts