மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது: ராஜ்நாத் சிங்

மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வராது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.

              இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,மக்களவைக்கு  முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான எந்த திட்டமும் இல்லை எனவும், 2019-ம் ஆண்டு மே 15-ந்தேதி வரை தற்போதைய மக்களவையின் ஆயுட்காலம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

             அதேபோல், மக்களவைக்கும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி பிரதமர் மோடி ஆராயுமாறு கூறியது குறித்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் தேர்தல் ஆணையம் நடத்தியதாகவும்  ராஜ்நாத்சிங் கூறினார்.கட்சிகளுடனான ஆலோசனைக்கு பின் கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி மக்களவைக்கும்.

             சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார் என்று அறிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இதேபோல் மத்திய சட்ட ஆணையமும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts