மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம்

வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர் வரும் மக்களவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குஒப்புகைச்சீட்டு முறையை முழுமையாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,  வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள உதவும் ஒப்புகைச்சீட்டு முறை 100 சதவீதம் அமல்படுத்தப்படும் என உறுதிபட தெரிவித்தார்.. தேர்தல் ஆணையத்தின் உறுதியை ஏற்று வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர். வாக்கு பதிவு செய்ததும்வாக்குப்பதிவு இயந்திரத்தில் வெளியாகும் ஒப்புகை சீட்டில்  யாருக்கு வாக்களித்தோம் என்பதை பார்க்க முடியும். ஆனால் இந்த சீட்டுகளை வெளியில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இவற்றை தேர்தல் ஆணையம் பத்திரப்படுத்திக்கொள்ளும். இந்த ஒப்புகைச்சீட்டு நடை முறை கடந்த தேர்தலில் சில தொகுதிகளில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் நம்பகத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில்  வரும் மக்களவை தேர்தலில் நாடு முழுவதிலும் ஒப்புகைச்சீட்டு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்த உள்ளது.  இதற்கான விவிபாட் இயந்திரம் வாங்க .ஆயிரத்து 173புள்ளி 47  கோடி ரூபாய் நிதி,ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Posts