மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் :ராகுல் காந்தி

2019- மக்களவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 120 கோடி இந்தியர்கள் மீது ஒற்றை கொள்கை திணிக்கப்படுகிறது எனவும், சொந்த மக்களுக்கு எதிராகவே அரசு போர் தொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம், ஜிடிபியில் 2 சதவீதத்தை அழித்து விட்டது என அவர் தெரிவித்தார். பகுஜன் சமாஜ்கட்சியுடன் கூட்டணி அமைக்காதது, தேர்தலில் பாதிப்பு ஏற்படுத்தும் என கருதவில்லை என்ற அவர்,. பா.ஜ.க.,வை கொள்கை ரீதியாக எதிர்க்கும் ஒரே கட்சி காங்கிரஸ் தான் என கூறினார். நாட்டின் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்பாட்டில் எடுக்க ஆர்எஸ்எஸ் முயற்சிக்கிறது எனவும், நாட்டில், அரசியல் அமைப்புகளை கைப்பற்ற முயல்வது அபாயகரமானது எனவும் அவர் எச்சரித்தார். வெளியுறவு கொள்கையில், திட்டமிடல் எண்ணம் இல்லை எனவும், ,நேபாளமும் மாலத்தீவும் இந்தியாவை விட்டு விலகி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். கூட்டணி கட்சிகள் விரும்பினால், பிரதமர் வேட்பாளராக நிற்போன் என்ற ராகுல், ஆட்சிக்கு வந்தால், சிறுகுறு தொழிலை வலுப்படுத்தப்படும் என்றார். விவசாயத்திற்கு முக்கியத்துவம், குறைந்த செலவில் தரமான மருத்துவம் மற்றும் கல்வி உள்கட்டமைப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தப்படும் என்ற ராகுல்காந்தி, 2019 தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார்.

Related Posts