மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும்; மு.க.ஸ்டாலின்


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பூரில் உள்ள பெருமாநல்லூர் பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து உரையாற்றினார். அப்போது, மத்திய, மாநில ஆட்சியில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய தேர்தல் என்றும், , திருப்பூரிலே இப்போது கூடியிருக்கும் கூட்டம், பிரசார பொது கூட்டம் போல் அல்லாமல் மாநாடு போல் உள்ளதாகவும் தெரிவித்தார். திருப்பூர் அரசியல் மாற்றங்கள் பல கண்ட ஊர் என்ற ஸ்டாலின் . மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம்100 சதவீதம் வெற்றி பெறும் என தெரிவித்தார். . பெரியாருடன் அண்ணாவை இணைத்த ஊர் இந்த திருப்பூர் தான் எனவும், தமிழன் தன்மானத்தோடு வாழ வித்திட்டதும் இந்த ஊர் தான்எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Posts