மக்களவைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்: திருமுருகன் காந்தி

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக 30 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு கடைசி நிமிடத்தில் மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களை பொறுத்தவரை மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் இதில் எந்தவித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்று திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Related Posts