மக்களவைத் தேர்தலில்  மார்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு: வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன்  

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் சில்லறை வணிகத்தை  காப்பாற்றும் கட்சிகளுடன் தமிழ்நாடு வணிக சங்கப் பேரவை ஆதரவு தரும் என தெரிவித்து இருந்ததாகவும்  அதன் அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கடிதம் அனுப்பிருந்த்தாகவும் தெரிவித்தார், ஆனால் எந்த கட்சியிடமும் இருந்தும் முறையாக பதில் வரவில்லை எனவும்  ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் சில்லறை வணிகத்தை காப்போம்  என உறுதி அளித்த்தாகவும் அவர் குறிப்பிட்டார்.  எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தங்கள் பேரவை ஆதரவு தரும் எனவும்,  மற்ற தொகுதிகளில் நல்ல வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாக்களிப்போம் எனவும் வெள்ளையன்  தெரிவித்தார்.

Related Posts