மக்களவைத் தேர்தலில்  வெற்றி கிடைக்காதபட்சத்தில் ஆட்சி அமைக்க ராகுல் காந்தி உரிமை கோர மாட்டார்:  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் 

2004, 2009-ம் ஆண்டுகளில் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில் சில கட்சிகள் ஆதரவுடன் மன்மோகன்சிங் பிரதமரானார். அதுபோல்  பிரதமராக  ராகுல் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 272 இடங்களுக்கு மேல் கிடைக்காவிட்டால், ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் எந்த முயற்சியையும் செய்ய மாட்டார் என்று தெரிய வந்துள்ளது. நேரு, இந்திரா, ராஜீவ்காந்தியைப் போல் பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சியில் அமர ராகுல் காந்தி விரும்புவதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்கும் நடவடிக்கைகளில் ராகுல் காந்தி ஈடுபடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அதற்காக மாநில கட்சித் தலைவர்கள் யாராவது ஒருவர் ஒருமித்த முடிவுடன் பிரதமராக முன் வந்தால் அவரை ராகுல் ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது. கர்நாடகாவில்காங்கிரஸ் கட்சிக்கு அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையிலும் 32சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே வைத்துள்ள குமாரசாமியை முதல் அமைச்சராக ஏற்றுக் கொண்டது இதேபோல் போல 30 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தாலும் மாநில கட்சித் தலைவர் ஒருவரை பிரதமராக ஏற்க ராகுல் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்திஇதற்காக  ஏ.கே. அந்தோணி, அசோக் கெலாட், ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத் ஆகியோர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார்.  இந்தக்குழு மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், நவீன்பட்நாயக், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே,  பாஜக ஆட்சி அமைவதைத் தடுக்க எந்த தியாகத்துக்கும் தயாராக இருக்குமாறு காங்கிரஸ் மூத்த தலைவர்களை ராகுல் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts