மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும்  நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள், பிரசாரம் மேற்கொண்டுள்ளன. கடந்த வாரம்  காங்கிரஸ் கட்சிவெளியிட்ட தேர்தல் அறிக்கையில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் என கருதப்பட்டது.முதற்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில்  பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்  ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். அப்போதுபேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். 

Related Posts