மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவு

17-வது  மக்களவைக்கான தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. இதில் 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.  இதோடு, ஆந்திராவில் 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும்  சிக்கிமில் 32 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் அருணாச்சல பிரதேசத்தில் 60 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஒடிசாவில் 28 தொகுதிக்கு முதல் கட்டமாகவும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. . காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

பீகார் 50.26 சதவீதமும், தெலங்கானாவில் 60.57 சதவீதமும் ,மேகலாயவில் 62 சதவீதமும்,உத்தரபிரதேசத்தில்59.77 சதவீதமும், மணிப்பூர் 78.20 சதவீதமும், லட்சத்தீவுகள் 65.9 சதவீதமும் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாகவும், ஒரு சில இடங்களில் வாக்குச்சாவடி மையங்களில் அடிதடி, வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு உள்ளிட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரத்தை பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. 

Related Posts