மக்களவைத் தேர்தல் நேர்மையான காவலருக்கும், ஊழல்வாதிக்கும் இடையிலான போட்டி பிரதமர் மோடி

மகாராஷ்டிர மாநிலம் அகமது நகரில் பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது தீவிரவாதத்துக்கு எதிராக வலுவற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்தார்.

நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் நாட்டுமக்களின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளாக விரைவாக முடிவெடுக்கும் வலிமையான அரசு அமைந்துள்ளதாகவும், அதற்கு முன் பத்தாண்டுகளில் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் அரசு அமைந்திருந்ததாகவும் பிரதமர் விமர்சித்தார்.

நேர்மையான காவலரைத் தேர்ந்தெடுப்பதா? ஊழல்வாதியைத் தேர்ந்தெடுப்பதா என்பதைப் புதிய வாக்காளர்கள் சிந்தித்துப் பார்த்து வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இந்தியாவின் நாயகர்களுக்கு உங்கள் வாக்கா ? பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு உங்கள் வாக்கா எனவும் பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பினார்.

Related Posts