மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்


டெல்லியில் இன்று நடைபெறும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடப்படுகிறது. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான குழுவினர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையில், ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் அளிக்கும் திட்டம் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது தவிர 2020 ம் ஆண்டு மார்ச் 31 க்குள் 22 லட்சம் அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்களும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த தேர்த்ல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்.

Related Posts