மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி: ப.சிதம்பரம் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்ட மன்ற இடை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து மத சார்பற்ற ஜக்கிய கூட்டணி சார்பில் க,பரமத்தி பேருந்து நிலையம் அருகே மாபெரும் பொது கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப,சிதம்பரம்,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் திமுக கூட்டணி அனைத்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மிக பெரிய வெற்றி பெற்றதாக தெரிவித்தார். ஆறு முறை இந்த கூட்டணி வெற்றி பெற்றிருப்பதாகவும், ஏழாவது முறையாக இந்த முறையும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Related Posts