மக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது

மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் பல்வேறு கட்சிகளும், பொதுமக்களிடம் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

வேளாண்மைக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவைகளுக்கு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழை மக்களுக்கு மாதம் 6,000 ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்பும் இன்று வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Posts