மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே அதானி துறைமுகம் விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்

மக்களின் கருத்துக்களை கேட்ட பின்னரே அதானி துறைமுகம் விரிவுபடுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். மீனவ கிராம மக்கள் அரசை சந்தித்து தங்களது கருத்துகளை சொல்ல விரும்பினால், அவர்களை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சி.பி.ஐ அதிகாரிகள் சுவர் ஏறி குத்தித்து கைது செய்யவேண்டிய நிலையை ஏற்படுத்தியது சிதமபரம் தான் என அவர் குறிப்பிட்டார். பயமில்லை என்றால் நேரிடையாக விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டியதானே என்றும் ஜெயக்குமார் வினவினார். முன்னதாக ஜி.எஸ்.டி குறித்த கருத்தரங்கம் சென்னையில் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.

Related Posts