மக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டதாக முதல்- அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி

மக்களின் நலன் கருதியே சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டதாக முதல்- அமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தெரிவித்தள்ளார்.

  8 வழிச் சாலைத் திட்டம் தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,  இந்தியாவிலேயே2-வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும்,  பசுமை வழிச்சாலை திட்டத்தின்மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்தார். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது சாலை வசதி மிக முக்கியம் என்ற முதல்வர், 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளில் தொழில் வளர்ச்சிக்காக 8 மற்றும் 10 வழிச் சாலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். சேலம்-சென்னை சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், , 89 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு பின்பற்றப்பட வேண்டும் என்பதே தமிழகத்தின் நிலைப்பாடு என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.

Related Posts