மக்களுக்கு பணியாற்றிட திமுகவுக்கு ஆதரவு அளியுங்கள்:  கனிமொழி 

தூத்துக்குடி மக்களவைத்  தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி,  தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பீட்டர் கோவில் தெரு, பெரிய கோவில் தெரு, ஜார்ஜ் ரோடு, தோமையார் கோவில் தெரு, காந்தி நகர் 2வது தெரு, லயன்ஸ் டவுன், மினி சகாயபுரம், இனிகோ நகர் ஆகிய பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் மக்களுக்கு பணியாற்றிட திமுகவுக்கு வாக்கு அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

இதேபோல் கரூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி  தாந்தோன்றி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலப்பாளையம் ,வடக்குபாளையம், ஏமூர்புதூர்,கத்தாழபட்டி,மருதம்பட்டிகாலனி உட்பட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் கிராம் கிராமமாக சென்று வாக்குகள் சேகரித்தார்.

Related Posts