மக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்பட்டு வருவகிறது

மக்களுக்கு விரோதமாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீட் தேர்வு காரணமாக மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த விரக்தியில் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா 2017 ம் ஆண்டு செப்டம்பர் 1 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் தாரப்பூர் டவர் அருகே அனிதா மறைவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவுப்செய்தனர். சென்னை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று சென்னை பெருநகர 14 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரோஸ்லின் துரை முன்பு ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 7 பேரும் இன்று நேரில் ஆஜராகி, உயர்நீதிமன்றம் வழங்கிய  தடை உத்தரவை சமர்ப்பித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், நீதிமன்றம், காவல்துறையை   அவதூறாக விமர்சித்த ஹெச்.ராஜா, எஸ்.வி சேகர் போன்றோரை கைது செய்யாமல், வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு, மக்கள் நலனுக்காக ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து  மக்கள் விரோத அரசாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

Related Posts