மக்களை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அனுமதிக்காது – ஓ. பன்னீர்செல்வம் உறுதி

மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், லத்தேரியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதலமைச்சர் .பன்னீர் செல்வம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 2021 ஆம் ஆண்டு தொலை நோக்கு திட்டத்தின் படி 2021 ஆம் ஆண்டு குடிசையே இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம் என்று உறுதிபட தெரிவித்தார். மக்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

Related Posts