மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என ஏழுமலையானிடம் பிரார்த்தனை

மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்ததாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

      ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஏழுமலையான் கோவிலில், மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் இன்று சுவாமி தரிசனம்  செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து, பின் ஆலய மரியாதையுடன் தீர்த்தப் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர். தரிசனத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

Related Posts