மக்கள் விரும்பாத திட்டங்களைச் செயல்படுத்த மாட்டோம் என  ராகுல் காந்தி தெளிவுபடுத்தியுள்ளார்:  ப. சிதம்பரம் 

காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 4 இடங்களில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்குபெற்று காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடுகளை விளக்கி மிகத்தெளிவாகப் பேசியுள்ளதாக தெரிவித்தார். தமிழகத்திற்கு நீட் தேர்வு ரத்து, தமிழக மக்கள் விரும்பாத திட்டங்களை காங்கிரஸ் அரசு செயல்படுத்தாது என்று கூறினார்.
 பாஜக அமைச்சர் பியூஸ் கோயல், நீட் தேர்வு தொடர்ந்து இருக்கும் என்றும் தமிழகத்திற்கோ அல்லது வேறு மாநிலத்திற்கோ விலக்கு அளிக்க முடியாது என்றும் அதிமுக அரசை தமிழ்நாட்டில் சம்மதிக்க வைப்போம் என்றும் அவர் பேசியிருப்பதாக தெரிவித்தார்.
 இரண்டு கட்சிகளின் நிலைப்பாடுகள் மக்களுக்கு தெளிவாக தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், இதில் யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் அரசு ஜனநாயக அரசாக அமையும் எனவும் பாஜக அரசு வழக்கம்போலவே சர்வாதிகார அரசாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts