மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்ததை தொடர்ந்து  சொத்துக்களை முடக்க பாகிஸ்தான்  உத்தரவு

இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில் அசாருக்கு எதிராக ஐநா கொண்டு வந்த தீர்மானம், முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அவரின் சொத்துக்களையும் உடனடியாக முடக்க வேண்டும். இந்த நடைமுறைகள் உடனடியாக அமலுக்கு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மசுத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன்,பிரான்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் வலியுறுத்தின.

ஆனால் அதற்கு சீனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த சீனா, தனது தடையை நீக்கிகொண்டதால் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மத்திய தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts