மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்க ஐ.நா. சபையில் தாக்கல் செய்துள்ளது

காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் 40 வீர்ர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்த, மசூத் அஸாரை, சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வலியுறுத்தின. இதற்கு சீன எதிர்ப்பு தெரிவித்த்தையடுத்து தீர்மானம் நிறைவேறவில்லை.

இந்நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி, ஐ.நா., பாதுகாப்பு சபையில், அமெரிக்கா, நேரடி தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில்,அமெரிக்க தாக்கல் செய்த இந்த தீர்மானம், இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்கும்’ என, சீனா அறிவித்துள்ளது.

Related Posts