மசூத் அசாரை பாகிஸ்தானுக்கு தப்பவிட்டது யார்: ராகுல் காந்தி கேள்வி 

டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வேலைவாய்ப்பின்மையே தற்போதுள்ள பெரிய பிரச்சனை எனவும், இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்ற பெயரால் நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டதாக குறிப்பிட்ட ராகுல்காந்தி, பயங்கரவாதியான மசூத் அசார் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ஆனால், அவரை பாகிஸ்தானுக்கு தப்ப விட்டது யார் என்வும் கேள்வி எழுப்பினார். க. அப்போது ஆட்சியில் இருந்தது பா.ஜ.க எனவும்,  காங்கிரஸ் கட்சி எந்த பயங்கரவாதியையும் பாகிஸ்தானுக்கு அனுப்பாது எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்படைகள் நரேந்திர மோடியின் தனிப்பட்ட சொத்துக்கள் கிடையாது என்ற ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது துல்லிய தாக்குதல்களை நடத்தி இருக்காது என மோடி கூறியதன் மூலம் அவர் காங்கிரசை அவமானப்படுத்துவதற்கு, மாறாக ராணுவத்தினரை அவமதித்து விட்டதாககுற்றம் சாட்டினார்.

Related Posts