மடத்துக்குளம் அருகே கிணற்றில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் மதியழகன் நகரை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி  நாகராஜ்,. இவரது மகன் அஜய் அரசு பள்ளியில் 5–ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று மாலை அஜய்,  தனது நண்பர்கள் சந்தோஷ், ஜீவானந்தம் மற்றும் கரிகாலன்  ஆகியோருடன் ஊருக்கு வெளியே உள்ள  கிணற்றுக்கு குளிக்கச் சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி அஜய்,  சந்தோஷ், ஜீவானந்தம் ஆகிய 3 பேரும் கிணற்றில் விழுந்து  மூழ்கினர். இதை பார்த்த  கரிகாலன் கிராமத்திற்கு சென்று  பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான்.  இதனால் அதிர்ச்சியடைந்த  பெற்றோர்களும் பொதுமக்களும் சிறுவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.

தகவல் கிடைத்த்தும் விரைந்து வந்த உடுமலை தீயணைப்பு படையினர் சுமார் நான்கு மணி நேரப்போராட்ட்த்திற்கு பிறகு அஜய்,  சந்தோஷ், ஜீவானந்தம் ஆகியோரை சடலமாக மீட்டனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சடலங்களை பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Posts