மணப்பாறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில்,  துள்ளிக்குதித்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

திருச்சி : மே-26

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பி. புதுப்பட்டி புனித சந்தியாகப்பர் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியை திருச்சி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பொன் ராமர் தொடங்கிவைத்தார். இதில், திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சுமார் 400-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு, வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.

காளைகளை அடக்கி வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், கட்டில், பீரோ, சைக்கிள், தங்ககாசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.

Related Posts