மணப்பாறை அருகே  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சோதனை 

கும்பகோணத்தை அடுத்த திருப்புவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 5 ம் தேதி மதமாற்றம் பிரச்சனை தொடர்பாக படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு படைக்கு மாற்றப்பட்டது. மேலும் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இளங்காகுறிச்சியைச் சேர்ந்த முகமது பாரூக் என்பவருக்கும் தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முகமது பாரூக் வீட்டிற்கு சென்று 4 மணி நேரம் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் ஒரு டைரி, ஒரு செல்போன், ஒரு புத்தகம் என சுமார் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. இருப்பினும் முகமது பாரூக்கிடம் முழுமையான விசாரணைக்கு பின்னரே சம்பவம் தொடர்பான உண்மை நிலை தெரியவரும்.

 

Related Posts