மணல் விவகாரத்தில் கடமை தவறிய முதல்வர் மற்றும் சி.வி. சண்முகம் பதவி விலக வேண்டும்

மணல் விவகாரத்தில் கடமை தவறிய முதல்வர் மற்றும் சி.வி. சண்முகம் பதவி விலக வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தமிழகத்தில் ஒரே ஒரு மணல் குவாரி மட்டுமே செயல்படுவதாகவும், நாள் ஒன்றுக்கு 80 லோடு மணல் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். எம் சாண்ட் மணல் போதுமான அளவு கிடைக்கவில்லை எனவும், கனிமவள அமைச்சர் சி.வி. சண்முகம்  தன்னிச்சையாக போலி ரசீது கொடுத்து எம் சாண்ட் மணலை  விற்பனை செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தமிழகம் முழுவதும்  கள்ளச்சந்தையில்  மணல் விற்பனை செய்யப்படுகிறது எனவும்,  இதற்கு மாவட்ட ஆட்சியர்களும்,  தமிழக  அமைச்சர்களும்  உடந்தையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  எனவே பொதுப்ணித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வரும், அமைச்சர் சி.வி.சண்முகமும் பதவி விலக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.  எம் சாண்ட் மற்றும் சவுடு மண்ணை இணையதள விற்பனையில் சேர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Posts