மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் வைரமுத்து

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்காக பாடல்கள் எழுத உள்ளதாக, பாடலாசிரியர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

வைரமுத்து எழுதிய தமிழாற்றுப்படை புத்தக வெளியீட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தென்சென்னை மக்களவை தொகுதி உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, நாடாளுமன்றத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக உதிக்கும் நாளே, தமிழர்களின் கனவு நிறைவேறும் நாள் என கூறினார்.  மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்காக, 12ம் நூற்றாண்டை மையமாக வைத்து பாடல்களை எழுத உள்ளதாகவும் வைரமுத்து தெரிவித்தார்.

Related Posts