மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி இன்று தமிழகம் வருகை

கர்நாடக முதலமைச்சராக வரும் 23 ஆம் தேதி பதவியேற்கவுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, இன்று தமிழகம் வருகிறார்.

கர்நாடகா : மே-20

கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகியதை அடுத்து, காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியமைக்கவுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி, வரும் 23 ஆம் தே முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி இன்று தமிழகம் வரவுள்ளார். ஸ்ரீரங்கத்தில் உள்ள கோயிலில் அவர் சிறப்பு வழிபாடு நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts