மதிமுகம் தொலைக்காட்சியை அரசு கேபிளில் சேர்க்க கோரி தமிழக அரசுக்கு வைகோ எச்சரிக்கை

மதிமுகம் தொலைக்காட்சியை அரசு கேபிளில் சேர்க்க வேண்டும் எனவும், தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட நேரிடும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை தரமணியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தென் சென்னை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயல்வீரர் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த முதல்வராக வருவதற்கு மதிமுக அடித்தளமாக அமையும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதிமுகம் தொலைக்காட்சியை அரசு கேபிளில் சேர்க்க வேண்டும் என்றும் தவறினால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட நேரிடும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Related Posts