மதிமுகம் தொலைக்காட்சி அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்பட்டதற்கு கண்டனம்

தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் மதிமுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பை நிறுத்தி, அரசு கேபிள் டிவி நிறுவனம் இருட்டடிப்பு செய்துள்ளதற்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை : ஜூன்-01

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்வாதிகார நடவடிக்கைகளால் எவரும் ஜெயித்தது கிடையாது எனக்கூறினார். அரசு கேபிள் டிவி சேவையில் மதிமுகம் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வைகோ, தமிழக அரசின் அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தொடரப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினார். எதிர்ப்புக்குரல் கொடுக்கிற அனைவரும் மீதும் பொய் வழக்கு தொடர்ந்தால், மக்கள் கொந்தளிப்பார்கள் எனவும் அவர் எச்சரித்தார்.

Related Posts