மதிமுகவினர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல்: சீமான் உள்ளிட்டோர் மீது கொலை மிரட்டல் வழக்கு

 

 

திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி, திருச்சி விமான நிலையம் வந்தனர். அப்போது, நாம் தமிழர் கட்சியினர், மதிமுக தொண்டர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். கட்சி கொடிக்கம்பங்களால் மதிமுகவினர் மீது, நாம் தமிழர் கட்சியினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக, திருச்சி மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு கொடுத்த புகாரின் அடிப்படையில், சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கூடுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியை சேர்ந்த 6 பேரை திருச்சி ஏர்போர்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Posts