மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம்

சென்னையில் நடைபெற்ற மதிமுக உயர்நிலைக்குழு கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகமான தாயகத்தில்  நடைபெற்றது.  திருப்பூர் துரைசாமி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோபொருளாளர் கணேசமூர்த்தி துணைப் பொதுச் செயலாளர்கள்  மல்லை சத்யா,  துரை. பாலகிருஷ்ணன்  ஏ கே மணி உள்ளிட்ட உயர் நிலை குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் வரும் மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts