மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்பு.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு  இம்மாதம்  18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இப்பதவிகளுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், தி.மு.க. ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தம் உள்ள 6 பதவிகளுக்கு 6 பேர் மட்டுமே தாக்கல் செய்ததால் அவர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி மாநிலங்களவையில் இன்று நடைபெற்றது.  புதிய உறுப்பினர்கள் அனைவரும் தமிழில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முதலாவதாக அதிமுக உறுப்பினர் சந்திரசேகரன் பதவியேற்றுக் கொண்டார். இதனை அடுத்து முகமது ஜான், திமுக உறுப்பினர்கள் சண்முகம், வில்சன் ஆகிய அனைவரும் தமிழில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர்களுக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வாழ்த்து கூறினார். அன்புமணி ராமதாஸ் தவிர்த்து மற்ற அனைவரும் இன்று பதவியேற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts