மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை புகழ் பெற்ற மனிதர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலா பாராட்டினார்.  

மும்பையில் நானி பல்கிவாலா நினைவு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை புகழ் பெற்ற மனிதர் என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலா பாராட்டினார்.

மும்பையில் நானி பல்கிவாலா நினைவு அறக்கட்டளை சார்பில் மனித உரிமைப் போராளிகளுக்கான விருது வழங்கும் விழா மும்பை நரிமன் முனையில் உள்ள டாடா அரங்கத்தில் இன்று  சிறப்பாக நடைபெற்றது. அனைத்து இந்திய அளவிலான இந்த விருது மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹென்றி திபேன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பும் பாராட்டு பட்டயமும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விருது பெற்ற ஹென்றி திபேனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார்.இவ்விழாவில்,உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுஜாதா மனோகர், வரியாவா ஆகியோரும், மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னணி வழக்குரைஞர்களும் பங்கேற்றனர். விழாவில் உரையாற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலா இந்திய அரசியல் சட்டத்தைப் பகுத்து, உலக நாடுகளின் அரசியல் சட்டங்களோடு ஒப்பிட்டு விவரித்தார். மேலும் அரசியல் சட்டத்தில்  திருத்தங்கள் செய்யப்பட்டதன் பின்னணிகுறித்தும் அவர் விளக்கினார். பின்னர் ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலாவை சந்தித்த வைகோ, அவரதுஅபாரமான உரை நாடி நரம்புகளை ஊடுருவி மின்சாரத்தைப் பாய்ச்சியதாக  தெரிவித்தார். அதற்கு பதிலளித்தநரிமன், தங்களைத் தெரியும் எனவும், தாங்கள் ஒரு புகழ்பெற்ற மனிதர் எனவும் பாராட்டினார். அப்போது தான்பொடா சட்டத்தில்  சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது தனக்காக அவரது தந்தையார் உச்சநீதிமன்றத்தில் வாதாடியதையும், விடுதலையாகி டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தபோது தங்களுக்கு தான் அறிமுகம் செய்யப்பட்டதையும் வைகோ நினைவு கூர்ந்தார். அதனை ஆமோதித்த ரோகிங்டன் நரிமன் நானி பல்கிவாலா, நன்றாக நினைவில் இருப்பதாக தெரிவித்தார்.

Related Posts