மதிமுக பொதுச் செயலாளர் வைகோ 4வது நாளாக பிரச்சாரப் பயணம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று 4வது நாளாக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தஞ்சாவூர் : மே-03

தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனையாக உருவெடுத்துள்ள காவிரி உரிமையை பெற முடியாமல் தமிழக அரசு திணறிவருகிறது. தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ள மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழ்நாட்டை புறக்கணித்து வருகிறது. காவிரி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் கடந்த 29 ஆம் தேதி பிரச்சார பயணத்தைத் தொடங்கினார். கடந்த 30 ஆம் தேதி ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ, நேற்று பட்டுக்கோட்டை நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றியங்கள் மற்றும் மதுக்கூர் ஒன்றியங்களில் பரப்புரை செய்தார். இன்று 4-வது நாளாக பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பேராவூரணி பேரூரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யவுள்ளார்.

Related Posts