மதுராந்தகத்தில் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் காவல்துறையினர் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்கள் எந்தவித அச்சமின்றி 100 சதவீதம் வாக்களிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடத்தினர். பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் தொடங்கி வைத்தார். மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி நகரின் முக்கிய சாலை வழியாக சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Related Posts